சேவூர் சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார்

0

 

செங்குந்தர் கைக்கோள முதலியார்             ⚜குலத் தோன்றல்⚜
18ஆம் நூற்றாண்டில் இறை தொண்டுக்காக நவகண்டம் செய்து கொண்ட 
சேவூர் சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார்

தோற்றம்

கொங்குவள நாட்டில் அவநாசித் தாலுகா சேவூரில் இருநூறு பாண்டுகட்கு முன்பு செங்குந்தர் மாபில் தோன்றினார் . இவருடைய தந்தையார் பெயர் அண்ணா மலை முதலியார். முத்துக்குமாரர் கல்வி கற்றுச் சிறந்த புலமையடைந்து திகழ்ந்தார். இறையன்பில் ஈடுபட்டுப் பல சிவப்பதிகட்கும் போய் இறைவழிபாடு செய்து கொண் டிருந்தார்.


தவம்

பதினாறாம் அகவையில் சத்திய மங்கலத்தை அடைந்து பவானிக் கரையில் இருந்த பத்திர காளியம்மன் கோயிலில் தவஞ் செய்துகொண்டிருந்தார். அம்மன்மீது பேரன்பு செலுத்தினார். ஒரு நாள் அம்மனுடைய காட்சியை விரும்பிக் கோயிலுக்குச் சென்றார். உள்ளே நுழைந்து தாளிட்டுக் கொண்டார். வெகு நேரம் பூசை முதலிய வழிபாடுகள் செய்தார். பிறகு தம்முடைய மார்பை அறுத்துப் பூசை செய்தார். கோயில் பூசகர் வந்து பார்த் தார். கதவு உட்புறம் தாளிடப்பட்டிருத்தலைக் கண்டார். எவ்வளவோ தட்டிப் பார்த்துங் கதவு திறக்கப்படவில்லை. பிறகு ஊரார்களும் வந்து கூடினார்கள். திறவுகோல் துளை வழியாக உள்ளே பார்த்தார்கள். இவர் மார்பை யறுத்துக் கற்பூரம் வைத்துக் கொண்டிருத்தலைக் கண்டார் கள். அவர்கட்கு மிகுந்த திகைப்புண்டாகி விட்டது. ஆற்றின் தண்ணீரும் குருதிமயமாக இருந்தது. முத்துக் குமாரரின் பத்தி அவர்கட்குப் பெருவியப்பைத் தந்தது. முத்துக்குமாரரின் மெய்யன்பைக் கண்ட அம்மை அவருக் குக் காட்சி நல்கினாள். பிறகு பத்திரகாளியம்மன் கோயிற் கதவு திறக்கப்பட்டது.

காட்டுப் புலியும் கவிப் புலியும்

பிறகு முத்துக்குமாரர் மைசூருக்குச் சென்றார். அப்போது சாமராச உடையார் என்பவர் அரசராக இருந் தார். மக்களைச் சிறுத்தைப் புலிகள் வருத்திக் கொண் டிருந்தன. முத்துக் குமாரர் தனியாகப் போய்ச் சிறுத்தை யைப் பிடித்துக் கொன்று அரசருக்குக் காட்டினார். சர் இவருடைய ஆண்மையைக் கண்டு வியந்து தகுந்தவாறு பரிசுகள் நல்கினார்.

சோதிடங் கூறல்

மைசூர் அரசர் பிள்ளைப் பேறில்லாமல் வருந்திக் கொண்டிருந்தார். இவர் பத்திரகாளியை வணங்கி பத் துத் திங்களில் அரசருக்கு மக்கட்பேறு உண்டாகுமென்று கூறினார். இதனை அரசர் ஆராய்ந்து பார்க்க எண்ணினார். இவரைப் பாதுகாப்புச் செய்து வைத்தார். பிள்ளை பிறந் தால் தம்முடைய பெயரை இடவேண்டும் என்று இவர் கூறினார். இவர் இயம்பியவாறே அரசருக்குப் பிள்ளைப் பேறு உண்டாகியது. அரசர் அப்பிள்ளைக்கு முத்துக் குமார உடையார் என்று பெயரிட்டார். புலவருக்குத் தகுந்த நன்கொடைகள் வழங்கியனுப்பினார்.

அழுக்கா றுந் தோல்வியும்

பிறகு புலவர் பல ஊர்களுக்குப் போய் அவிநாசியை அடைந்தார். பெருங்கருணையம்மனைத் தொழுது போற்றி னார். மிகுந்த சிறப்புடன் குதிரைமீது ஊர்வலம் வந்தார். சாணார்கள் இவர் குதிரைமீது வருவதைக் கண்டு பொறாமை கொண்டார்கள். இவரை எதிர்த்தார்கள். இவர் அவர் களை வென்று புறங்கண்டார். பிறகு சேவூர் சென்றார். அங்கிருந்த முத்துக்கருப்ப முதலி என்னும் செங்குந்த னிடம் முந்நூறு வராகன் பணங்கொடுத்துக்கேட்கும்போது கொடுக்குமாறு வாக்குறுதி பெற்றுக்கொண்டார்.


வீர சொர்க்கம்

ஊருக்கு அண்மையில் ஒரு தோட்டத்தில் ஒரு பரண் கட்டினார். கலி சஅசஉ துந்துபி யாண்டு மார்கழித் திங் கள் மூன்றாம் நாள் வீர சொர்க்கம் அடைவதாகக் கூறித் தமது உடலில் குத்திச் சங்கிலி கட்டி ஊர்வலமாக இழுத் துச்செல்லச் செய்து பல கடுமையான திருவிளையாடல்களைச் செய்து காட்டினார். தமது உடலின் ஊனைத் துண்டு துண்டாக வெட்டிச் சூறையிட்டுக் கொண்டு சென்றார். அப்போது பல செய்யுட்களைப் பாடினார்.

இறுதி

பிறகு பரணை படைந்து எஞ்சிய ஊனையும் அறுத்துச் சிவபதம் அடையுஞ் சமயத்தில் முத்துக்கருப்ப முதலியை அழைத்துத் தருமஞ் செய்வதற்குப் பணத்தைக் கொடுக்கு மாறு அழைத்தார்.அவன் வராமல் ஓடி ஒளிந்து கொண் டான். அவன் குடியைச் சபித்தார். பிறகு கழுத்தில் அலகு பாய்ச்சிச் சுவர்க்கம் புகுந்தார்.

அங்குச் சமாதி கட்டிப் புலவரின் உடலை அடக்கஞ் செய்தனர். சகூசுஉ - இல் அரசமரம் விழுந்ததால் சமாதி பெயர்க்கப் பட்டதில் இவருடைய எலும்புகள் அப்படியே காணப்பட்டன. மீண்டும் அங்குச் சமாதி கட்டப்பட்டது. இவரைப் போன்ற கல் விக்கிரகம் பத்திர காளியம்மன் கோயிலில் இருக்கிறது. முத்துக்குமாரப் புலவரால் இயற்றப் பெற்ற பாடல்களும் அவர் மீது ஏனையோர் பாடிய பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களும் நாட்டிலே வழங்குகின்றன.

17 ஆம் நூற்றாண்டு சேவூர் கச்சி அண்ணாமலை முதலியார் மகன் முத்துக்குமார நயினார் என்னும் சைவ மத சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார் கடவுளை வேண்டி நவகண்டம் செய்து கொண்டதாக பண்டைய செப்பேடு கூறுகிறது.

மைசூர் மகாராஜா முத்துக்குமாரசாமி சித்தருக்கு 1741ஆம் ஆண்டு செம்பு பட்டயம் எழுதிக் கொடுத்தார்.

சேவூர் செங்குந்தர் செப்பேடு

 இந்த செப்பேட்டில் முதற்கண் செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் பெருமை தொகுத்துக் கூறப்பட்டது. கொங்கு 24 சமயமுதலி பட்டக்காரர் உள்ளிட்ட சமூகப் பெரியவர்கள் கூடிய கூட்டத்தில் தலைப்பலி(நவகண்டம்) செய்து கொண்ட சித்தர் முத்துக்குமாரசாமி முதலியார் தன் மகன் குப்பமுத்து முதலியார் ராஜாதிபதி மண்டல அதிபதி மடாதிபதி என்று பட்டம் சூட்டினார். செங்குந்தர்கள் மடத்திற்கு கொடுக்க வேண்டிய வரிகளை பற்றி கூறப்படுள்ளது. இடங்கைப் பிரிவினர் என்று கூறப்படுகின்றது.
சித்தரின் 8ஆம் வம்சாவளியான சின்னசாமி முதலியார் பாதுகாத்து வருகிறார்.

முத்துகுமார் சித்தர் வழிபட்ட ஸ்படிக வினாயகர் , ஸ்படிகலிங்கம்,  காமாட்சி அம்மன் உள்பட உள்ளது, சேவூர்.
முதன்முதலில் கோவை மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் முத்துக்குமாரசாமி ஜீவ சமாதி கோயில் காணியாளர்கள் ஆன கொளப்பலூர் அருணாசல முதலியாரிடம் 
பெறப்பட்ட இச்செப்பேடு ஆவணம் செய்யப்பட்டது.


இந்த செப்பேட்டில் உள்ள தகவல் கிழே உள்ள படத்தில் காணலாம்👇











சேவூர் செங்குந்தர் செப்பேடு முன்பக்கம்

சேவூர் செங்குந்தர் செப்பேடு பின்பக்கம்






சித்தர் முத்துக்குமார சுவாமி முதலியார் வரலாறு புத்தகம்
Pdf download link: CLICk
Desktop View யில் வைத்து புத்தகத்தைப் படிக்கவும்

…..






வெளி இணைப்புகள்:
ஆவணம் இதழ் 22: click

Post a Comment

0Comments
Post a Comment (0)